


ஈப்போ, ஜுன்.23: ம இ கா வின் மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு மூவர் மட்டுமே பேராக் மாநில பிரதிநிதிகளாக போட்டியிடுகிறார்கள்.
இம்முறை 45 போட்டியாளர்கள் களம் காணும் பொருட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
பேராக் மாநிலம் பொருத்தமட்டில் பெரிய மாநிலமாகவும், அதிக ம இ கா கிளைகள் கொண்ட மாநிலமாக திகழ்கிறது.
இம்முறை பேராக் மாநில பிரதிநிதிகளாக வின்சென்ட் டேவிட் எண் 8; மகேந்திரன் இராமச்ந்திரன் எண் 26 மற்றும் டத்தோ ஆர்.சுப்பிரமணியம் எண். 42 ஆகியோர் மத்திய செயலவை உறுப்பினர் போட்டியில் களம் காணுகின்றனர்.
இம்முறை 45 ம இ கா பேராளர்கள் மத்திய செயலவைக்கு போட்டியிடுவது ஆரோக்கியமான நடவடிக்கையாகும்.
இவர்களில் முதல் 21 வெற்றியாளர்கள் மட்டுமே மத்திய செயலவைக்கு தேர்வாகவுள்ளனர்.
இவர்களில் 8 எண் கொண்ட வின்சன் டேவிட் நடப்பு மத்திய செயலவை உறுப்பினராகவும், சுங்கை சிப்புட் ஜாலோங் கிளை தலைவருமாவார். 26 எண் கொண்ட மகேந்திரன் இராமச்சந்திரன் கோப்பெங் ம இ கா தொகுதி தலைவராவார்.
அதோடு, 42 ஆம் எண் கொண்ட டத்தோ ஆர். சுப்பிரமணியம் நடப்பு மத்திய செயலவை உறுப்பினர் என்பதோடு,பாகான் டத்தோ ம இ கா தொகுதித் தலைவர் ஆவார்.

