
கோலாலம்பூர், ஜூன் 24: நேற்று இரவு பட்ஜெட் ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையில் புக்கிட் பிந்தாங்கில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நம்பப்படும் 16 ஆப்பிரிக்க பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 21 முதல் 40 வயதுக்குட்பட்ட குறிப்பிட்ட பெண்கள் அனைவரும் சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் RM100 விலையில் பாலியல் நடவடிக்கையில் சமீபகாலமாக ஈடு பட்டுள்ளனர் என டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹான் யஹாயா கூறினார்
.
புக்கிட் பிந்தாங்கை சுற்றி வாடிக்கையாளர்களைப் பெற சாலையோரத்தில் நிற்கும் யுக்தியை இந்தப் பெண்கள் பயன் படுத்துகின்றனர். பின்னர், தினசரி வாடகைக்கு எடுக்கப்பட்ட பட்ஜெட் ஹோட்டல் அறைக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்கின்றனர் என அவர் கூறினார்.

