
சிரம்பான், ஜூன் 24: தேர்ச்சி பெறாதவர்களுக்கு உடனடி உரிமம் அல்லது ‘காபி ஓ’ மூலம் வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படும், நிறுவனங்களின் இயக்க உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
இது போன்ற செயல்கள் சாலையைப் பயன்படுத்துபவர்களின், குறிப்பாக இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், ஓட்டுனர் பயிற்சி துறையில் ஊழல் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
“வாகனம் செலுத்த கற்று தரும் நிறுவனங்கள் ஊழலில் ஈடுபடக்கூடாது. அதை ஒழிக்கா விட்டால், இளைஞர்கள் பலியாவார்கள், நாங்கள் மனித உயிரைக் காப்பாற்ற விரும்புகிறோம்.
“சமூக ஊடக விளம்பரங்களில் பறக்கும் உரிமம் எனும் சரியான தேர்ச்சியற்றவர்களுக்கு உடனடி ஓட்டுனர் உரிமம் வழங்கும் விளம்பரங்களை கண்டு மக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டார்கள்,
இங்கு “RDS Driving Academy Sdn Bhd“ மற்றும் Orang Asli L உரிமத் திட்டத்தின் 10வது ஆண்டு விழாவில் பேசுகையில் அவர் கூறினார்.

