அரசாங்க வாய்ப்புகளை இந்திய கூட்டுறவுக் கழகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

கோலாலம்பூர்: ஜூன் 24-
அரசாங்கத்தில் உள்ள வாய்ப்புகளை இந்திய கூட்டுறவுக் கழகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ இரமணன் கேட்டுக் கொண்டார்.

கேகேபி எனப்படும் தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்தின் 44ஆவது ஆண்டுக் கூட்டம் நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தை தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சி.
பி40 மக்களுக்காக இக்கூட்டுறவுக் கழகம் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது வரவேற்கத்தக்கது.

அதே வேளையில் அமைச்சின் கீழ் 10 இலாகாக்கள் உள்ளன. இதன் கீழ் பல திட்டங்கள் அமலில் உள்ளன.
இதன் வாயிலாக கிடைக்கும் வாய்ப்புகளை இந்திய கூட்டுறவுக் கழகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles