
ராவாங் ஜூன் 24
இந்நாட்டில் பல்வேறு சமூகங்களுக்கிடையே நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதில் ருக்கூன் தெத்தாங்கா முக்கிய பங்காற்றி வருவதாக தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
இந்த ஒற்றுமை உணர்வின் வழி சமூகங்களுக்கிடையே தார்மீக மதிப்புகளை வளர்க்க முடியும் என்று
ரவாங் நியூ கிரன் பார்க் விளையாட்டு மைதானத்தில் கோம்பாக் மாவட்ட ராவாங் B ருக்கூன் தெத்தாங்கா ஏற்பாடு செய்த சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
சமூகங்களுக்கிடையே பரஸ்பர உறவு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகளை ருக்கூன் தெத்தாங்கா தொடர்ந்து நடத்த வேண்டும்.
ருக்கூன் தெத்தாங்கா இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த தேசிய ஒற்றுமை துறை அமைச்சு தேசிய ஒற்றுமைத்துறை இலாக்காவின் வழி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ருக்கூன் தெத்தாங்கா மேற்கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என செனட்டர் சரஸ்வதி குறிப்பிட்டார்.

