பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான கடனுதவி – ஹிஜ்ரா

ஷா ஆலம், ஜூன் 27– சிலாங்கூர் மாநிலத்தில் சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான மூலதன கடனுதவியை யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வழங்குகிறது.

நியாகா டாருல் எஹ்சான் (நாடி) திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்புவோர் https://mikrokredit.selangor.gov.my என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறவாரியம் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

இந்த உதவி குறிப்பாக சிலாங்கூர் டாருள் ஏஹ்சானில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு டாருல் ஏஹ்சான் வணிகக் கடனுதவித் திட்டம் (நாடி) 50,000 வெள்ளி வரை நிதியுதவி வழங்குகிறது.

விண்ணப்பதாரர்கள் சுவரொட்டியில் உள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது மேலும் தகவலுக்கு அருகிலுள்ள ஹிஜ்ரா கிளையை தொடர்பு கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

உற்பத்தி மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கான திறனை அதிகரிக்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறை உதவுகிறது. இதன் மூலம் இணைய விற்பனை வாயிலாக லாபத்தை அதிகரிக்க முடியும். இது குறித்த மேலும் தகவலுக்கு www.hijrahselangor.com என்ற அகப்பக்கத்தை பார்வையிடலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles