
கோலாலம்பூர் ஜூலை 1
எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் , இனம் பாராமல் மெட்ரிகுலேசன் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
பிரதமர் இந்த அறிவிப்பு நாட்டில் கல்விக்கு முக்கியதுவம் அளிப்பதையும் அனைத்து சிறந்த மாணவர்களுக்கும் கல்வி சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
சரியான நேரத்தில் பிரதமர் இந்த அறிவிப்பை செய்ததற்கு நன்றி.
பிரதமரின் உத்தரவுக்கு இணங்க எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற அனைத்து இன மாணவர்களுக்கும் மெட்ரிக்குலேசனில் இடம் கிடைப்பதை கல்வி அமைச்சு உறுதி செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் 10ஏ பெற்ற இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷனில் பயில வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குறைகூறல்கள் எழுந்தன.
இதுபோன்ற பிரச்சினைகள் இனியும் எழாமல் இருப்பதை கல்வி அமைச்சு பார்த்து கொள்ள வேண்டும்.
கல்வி என்பது அனைவருக்கும் சமம்.அந்த கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எவரும் இதில் இருந்து விடுபடக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

