
கோலாலம்பூர் ஜூலை 1
ம இகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு நாடாறிந்ந சமூக சேவையாளர் டத்தோ ஏ.கே. இராமலிங்கம் போட்டியிடுகிறார்.
கடந்த முறை தேசிய உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இவர் இம்முறை கட்சியின் ஒற்றுமை கருதி மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதாக அவர் சொன்னார்.
கடந்த காலங்களில் இந்திய சமுதாயத்திற்கு கடுமையாக உழைத்து பல வகைகளில் உதவிகளை செய்து இருக்கிறேன்.
அந்த வகையில் தொடர்ந்து இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற இலக்கில் மத்திய செயலவை போட்டியில் களம் இறங்கி இருப்பதாக அவர் சொன்னார்.

