
கோலாலம்பூர் ஜூலை 1
எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற அனைத்து இன மாணவர்களுக்கும் மெட்ரிக்குலேசனில் பயில இடம் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தெரிவித்தார்.
Anak melayu anak saya, anak India anak saya anak cina anak saya, anak iban Dan kadazzan anak saya என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எந்த மேடையிலும் அடிக்கடி கூறுவார்.
அதற்கு ஏற்ப 10ஏ பெற்ற அனைத்து இன மாணவர்கள் மெட்ரிகுலேஷனில் கல்வி பயில வாய்ப்பு வழங்கப்படுவது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.
கடந்த காலங்களில் 10ஏ பெற்ற இந்திய மாணவர்கள் தங்களுக்கு இடம் வழங்கப்படவில்லை என்ற குறைகூறல்கள் எழுந்தன.
இது இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
இதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

