பேராக் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான காற்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 32 குழுவும், பெண்கள் பிரிவில் 19 குழுவும் பங்கு பெறுகின்றன.

ஈப்போ, ஜுலை. 4: பேராக் இந்திய காற்பந்து சங்கம் 16 வது ஆண்டாக தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான காற்பந்து போட்டியை இம்மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜுலை 7 ல் நடத்தவுள்ளது.

இப்போட்டி இங்குள்ள ஈப்போ பாடங்கில் , கலை மணி 8.00 க்கு தொடங்கவுள்ளது.

இவ்வாண்டு இப்போட்டியை பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தொடக்கி வைக்கவுள்ளார் என்று பேராக் இந்திய காற்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு அடுத்து அதிகமான தமிழ்ப்பள்ளிகள் எண்ணிக்கை கொண்ட மாநிலமாக பேராக் மாநிலம் திகழ்கிறது. தற்போது இம்மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

அவற்றில் இம்முறை 32 பள்ளிகள் ஆண்கள் பிரிவிலும், 19 பள்ளிகள் பெண்கள் பிரிவிலும் விளையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த போட்டியை மிகவும் சிறப்பாக நடைபெற பேராக் மாநில அரசாங்கம் நிதியுதவி வழங்கி வருகிறது.

இந்நிதியை வழங்கி உதவிய ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் மற்றும் பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முகமட்டிற்கும் அவர் நன்றியை தெரிவி்த்துக் கொண்டார்.

இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலிடம் பெறும் குழுவிற்கு 800 ரிங்கிட், நினைவுச் சின்னங்கள் மற்றும் சுழற்கிண்ணம் பரிசாக வழங்கப்படும்.

இரண்டாம் நிலை குழு 500 ரிங்கிட் மற்றும் இதர பரிசுகள், மூன்றாம் நிலை குழுவிற்கு 300 ரிங்கிட் மற்றும் பரிசுகள், நான்காம் நிலை குழுவிற்கு 200 ரிங்கிட் மற்றும் இதர பரிசுகள் வழங்கப்படும்.

பெண்கள் பிரிவில் முதல் நான்கு குழுவிற்கு 500, 300, 200 மற்றும் 100 ரிங்கிட் இதர பரிசுகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இப்போட்டி சிறப்பாக நடைபெற பெற்றோர்கள், பொதுமக்கள், நன்கொடையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் காற்பந்து இரசிகர்களின் ஆதரவு கிடைக்குமென்றால், அடுத்தாண்டு 100 குழுக்கள் பங்குப் பெற ஏற்பாடுகள் செய்யப்படும்.

ஆண்கள் பிரிவினர் மாண்புமிகு அ.சிவநேசன் கிண்ணத்திற்கு போட்டியிடுவார்கள். பெண்கள் பிரிவினர் ” பிவி நகைக்கடை” கிண்ணத்திற்கு போட்டியுடவுள்ளனர் என்று டத்தோ அமாலுடின் இஸ்மாயில் பதிவு செய்தார்.

இச்சந்திப்பில், பிவி நகைக்கடை உரிமையாளர் அமான்ஷா டத்தோ அமாலுடின் இப்போட்டிக்காக நன்கொடை வழங்கி உதவினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles