மெட்ரிகுலேஷனில் இந்திய மாணவர்களுக்கு 2,500 இடங்களை ஒதுக்குங்கள்!இந்திய அமைப்புக்கள் வேண்டுகோள்

கோலாலம்பூர் ஜூலை 4-
மெட்ரிகுலேஷன் பயில இந்திய மாணவர்களுக்கு 2,500 இடங்களை ஒதுக்கி விடுங்கள் என்று ஆகம மணி தலைவர் அருண் துரைசாமி மற்றும் 360 இந்திய அமைப்புக்கள் இன்று வேண்டுகோளை முன் வைத்தன.

கடந்த 2017 அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் பயில 2,500 இடங்களை வழங்கினார்.

இப்போது உள்ள மடானி அரசாங்கம் இந்த 2,500 இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

மலேசிய தமிழ் பள்ளிகள் ஒருங்கிணைப்பு பேரவை தலைவர் வெற்றி வேலன் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இதர இந்திய அமைப்புகளும் இதை ஆணித்தரமாக வலியுறுத்தின

360 இயங்கங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இவர்கள் மலேசியத் தமிழ்க்கல்வி கூட்டமைப்பின் நிகராளிகளாகக்
கலந்து கொண்டன.

1.மலேசியத் தமிழ்ப்பள்ளி நலனபிவிருத்தி மன்றத்தின் தலைவர் திரு. வெற்றி வேலன்

  1. ஆகம அணியின் தலைவர் திரு. அருண்துரைசாமி
  2. 170 தமிழ் இயங்கங்கள் ஒருங்கிணைந்த பேரவையின் செயலர் முனைவர் குமரன் வேலு, உதவித் தலைவர் ஜான்சன் விக்டர்
  3. முன்னாள் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர்
    திரு. சுந்தரம்
  4. மலேசிய முன்னாள் மாணவர் பேரவையின் தலைவர் டத்தோ ஆர்ஆர். கிருஷ்ணன், துணைத்தலைவர் திரு.குமரன் மாரிமுத்து
    இன்னும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles