
கோலாலம்பூர் ஜூலை 4-
இந்திய 10ஏ பெற்ற அனைத்து இன மாணவர்கள் மெட்ரிகுலேஷனில் பயில வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று மலேசிய தமிழ் பள்ளி ஒருங்கிணைப்பு பேரவை தலைவர் மா.வெற்றிவேலன் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.
கடந்த காலங்களில் 10ஏ பெற்ற இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷனில் பயில வாய்ப்பு மறுக்கப்பட்ட தை மறுக்க முடியாது.
இனியும் இதுபோன்ற கசப்பான சம்பவம் நமது மாணவர்களுக்கு ஏற்பட்டால் கூடாது.
பிரதமரின் உத்தரவுக்கு இணங்க கல்வி அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு சரியான அணுகுமுறையை கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேர்ச்சி பெற்ற அனைத்து இன மாணவர்களுக்கும் மெட்ரிக்குலேசனில் இடம் கிடைக்க வேண்டும்.
அனைவருக்கும் நீதியின் அடிப்படையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும் என்று அவர் சொன்னார்.

