மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு நானேசட்டப்பூர்வ தலைவர்!வெற்றியை அறிவிக்க கோரி நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் இராமன்

செ.வே.முத்தமிழ்மன்னன்

கோலாலம்பூர் ஜூலை 5-
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு நானே சட்டப்பூர்வ தலைவர்.
எனது வெற்றியை அறிவிக்க கோரி இராமன் தெமர்லோ உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். நாட்டில் பிரசித்திப் பெற்ற மாரான் மரத்தாண்டவர் ஆலயத் தேர்தல் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைப்பெற்றது . மாரான் மரத்தாண்டவர் ஆலயத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எனக்கு 250 வாக்குகள் கிடைத்தன. டத்தோ தமிழ் செல்வத்திற்கு 206 வாக்குகள் கிடைத்தன. ஐந்து செல்லாத வாக்குகள்.ஆனால் கள்ள வாக்குகள் போட்டு விட்டார்கள் என கூறி தேர்தல் முடிவை அறிவிக்க மறுத்து விட்டார்கள்.

மறுநாள் ஜூன் 24 ஆம் தேதி குவாந்தான் ஆர்ஓஎஸ் அலுவலகத்தில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டது.
அப்போது எனக்கு 250 வாக்குகளும் தமிழ் செல்வத்திற்கு 204 வாக்குகளும் கிடைத்தன. இரண்டு முறை எண்ணப்பட்ட முடிவில் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.
தேர்தல் அதிகாரி சுப்ரமணியம், டத்தோ எம்.பி. நாதன், டத்தோ தேவேந்திரன், தர்மா கவுண்டர், அரிக்கிருஷணன் ஆகியோர் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில் இவர்கள் தேர்தல் முடிவை அறிவிக்காததால் எனது வெற்றியை உறுதிபடுத்த தெமர்லோ உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறேன் என்று அவர் சொன்னார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மாரான் மரத்தாண்டவர் ஆலயத் தலைவர் பதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக கொண்டு இதர பதிவிகளுக்கும் முறைப்படி தேர்தல் அதிகாரிகள் மூலம் தேர்தலை நடத்துவேன் என்றார் அவர். மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு நானே சட்டப்பூர்வ தலைவர். தோல்வி கண்ட தமிழ் செல்வம் தலைவர் அல்ல.
இன்னமும் நானே தலைவர் என்று கூறிக் கொள்வது முறையல்ல.நாட்டில் புகழ்பெற்ற வழக்கறிஞர் செல்வம் சண்முகம் மூலமாக ஜூலை 3 ஆம் தேதி தெமர்லோ உயர்நிதிமன்றத்தில் தமிழ் செல்வம் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளேன் . இதனிடையே ஆகஸ்ட் 1 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கான தேதி நிர்ணயிக்கப்படுகிறது என்று வழக்கறிஞர் செல்வம் சண்முகம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles