

பெர்லின் ஜூலை 6-
ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் இன்று அதிகாலையில் நடந்த பரபரப்பான முதல் கால் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.
முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கப்படவில்லை. பிற்பகுதியில் 51 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை டேனி அடித்தார்.
ஆட்டம் முடியும் தருவாயில் 89 ஆவது நிமிடத்தில் ஜெர்மன் கோலை புளோரின் அடித்தார்.
வெற்றியாளரை முடிவு செய்ய 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் 119 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் 2 ஆவது கோலை மிக்கல் மெரினோ அடித்து கலக்கினார்.
இறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
பின்னர் நடைபெற்ற மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 5-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
கிறிஸ்டினா ரொனால்டோ தலைமையில் விளையாடிய போர்த்துகல் பல வாய்ப்புகளை கோட்டை விட்டது.
120 நிமிட ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்களை அடிக்கவில்லை. இறுதியில் பெனால்டி கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு பிரான்ஸ் முன்னேறியது.

