இந்திய முஸ்லிம் தோழர்கள் நட்புறவு இயக்கத்தின் ஏற்பாட்டில் இராமநாதபுரம் உறுப்பினர் நவாஸ் கனிக்கு பாராட்டு விழா விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர்: ஜூலை 6-
இந்திய முஸ்லிம் தோழர்கள் நட்புறவு இயக்கத்தின் ஏற்பாட்டில் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனிக்கு நேற்று தலைநகர் பேங்க் ராயட் துன் அப்துல் ரசாக் மண்டபத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்திய மக்களவை உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவருமான நவாஸ் கனி பேசுகையில்
மலேசிய மக்களின் அன்பையும் ஆதரவையும் கண்டு மனம் நெகிழ்ந்து போகிறேன் என்றார்.

ஆகையால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு மட்டும் நான் பிரதிநிதி இல்லை. மலேசியாவில் உள்ள தமிழர்களுக்கும் நான் பிரதிநிதி தான் என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

மலேசிய தமிழர்களின் கோரிக்கைகளையும் இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் சிம்ஸ் அமைப்பின் தலைவர் டத்தோ கனி வாழ்த்துரை வழங்கினார். மஸ்ஜித் இந்தியா இமாம் டாக்டர் செய்யது இப்ராஹிம் பிரார்த்தனை செய்தார்.

அமைப்பின் ஆலோசகர் ஹாஜி புஹாரி நன்றி பாராட்டினார்.

எஸ் எம் எஸ் தீன் குழுமத்தின் தலைவர் டத்தோ சிராஜ் தீன், காயு உணவகக் குழுமத்தின் தலைவர் ஹாஜி புர்ஹான் ஒருங்கிணைப்பில் இந்திய முஸ்லிம் தோழர்கள் நட்புறவு இயக்கத்தின் நிர்வாகிகள் இந்த வரவேற்பு நிகழ்வை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

கோலாலம்பூர் புடு பசார் ரஹ்மான் உணவகத்தின் உரிமையாளர் இளம் தொழிலதிபர் சைட் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles