ஈஷாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் டேவிட் மார்ஷல் கோரிக்கை

கோலாலம்பூர்: ஜூலை 6-
இணைய பகடிவதைக்கு இலக்கான இந்திய இளம் பெண் ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஈஷா என நம்பப்படும் அப் பெண்ணின் மரணம் தற்போது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பத்துகேவ்ஸ் ஸ்ரீ கோம்பாக்கைச் சேர்ந்தவரான் ஈஷாவை அண்மைய காலமாக சமூக வலைத் தளங்களில் பகடிவதை செய்து வந்துள்ளனர்.

குறிப்பாக டிக் டாக்கில் அப் பெண்ணுக்கு எதிராக அவதூறுகளும் பரப்பப்பட்டுள்ளது.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இணைய தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.

ஈஷாவின் மரணத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் இதுபோன்ற பகடிவதைக்கு முற்றுப்புள்ளியே இல்லையா?

மரணமடைந்த ஈஷாவுற்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக ஊடக பயனர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே ஈஷாவின் மரணம் குறித்து முறையாக போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதற்கான நடவடிக்கை உரிமை கட்சி முன்னெடுக்கும் என்று அக்கட்சியைச் சேர்ந்த டேவிட் மார்ஷல் இன்று தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles