ம இகா உதவித் தலைவர் தேர்தலில் வாகை சூடி மீண்டும் வரலாறு படைப்பாரா டத்தோ மோகன்! மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு கடுமையான போட்டி

கோலாலம்பூர் ஜூலை 6-
|ம இகா உயர் மட்ட பதவிகளுக்கு இன்று வாக்களிப்பு நடைபெறும் வேளையில் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டத்தோ டி மோகன் மீண்டும் அமோக வெற்றி பெற்று சாதனை படைப்பாரா என்பதை தெரிந்து கொள்ள இந்திய சமுதாயம் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. ம இகா தேசிய தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவராக டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர் இந்நிலையில் 3 உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ மோகன் டத்தோ முருகையா டத்தோ அசோஜன் மற்றும் டத்தோ நெல்சன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில் ம இகா தேசிய உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ மோகன் அமோக வெற்றி பெற்றார்.

இந்த முறையும் அவர் அமோக வெற்றி பெற்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டத்தோ முருகையா டத்தோ அசோஜன் மற்றும் டத்தோ நெல்சன் ஆகியோரும் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.21 மத்திய செயலவை உறுப்பினர்கள் பதவிக்கு மொத்தம் 44 பேர் போட்டியிடுகிறார்கள். டத்தோ முத்து, டத்தோ இராமலிங்கம்,டத்தோ கருப்பண்ணன், தர்மகுமரன், செபூத்தோ குணசீலன், பண்டார் துன் ரசாக் கந்தன் , டத்தோ தமிழ் செல்வம், டத்தோ முனியாண்டி, டத்தோ ஆனந்தன், டத்தோ சக்தி வேலு, டத்தோ கமலநாதன், டத்தோ தமிழ் வாணன், தர்மகுமரன் , அண்ட்ரூ டேவிட் உட்பட பலரும் வெற்றி பெறுவீர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வாக்களிப்பு நடைபெறுகிறது. சுமார் 18, 000 பேராளர்கள் இதில் வாக்களிக்கும் தகுதியை பெற்றிருக்கிறார்கள்.இன்று நள்ளிரவுக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles