
வெளிநாட்டவரை திருமணம் செய்த மலேசியா தாய்மார்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று தேசிய முன்னணி தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக கூட்டரசு அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இப்போது வெளிநாட்டில் பிறக்கும் மலேசியா தந்தைகளின் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது.
தங்கள் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலேசியா தாய்மார்கள் நீதிமன்றத்தின் மூலமாக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

