
நாடாளுமன்றத்தில் ஏழைகளின் குரல் ஒலிக்க ஐபிஎப் கட்சியை வெற்றி பெற செய்யும் படி பினாங்கு மாநிலத்தில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐபிஎப் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் குரலாக ஐபிஎப் விளங்குகிறது.
32 ஆண்டுகளுக்கு பின்னர் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக வேட்பாளர் ராயருக்கு கடுமையான போட்டியை வழங்கி வருகிறோம்.
இந்த தேர்தலில் ஐபிஎப் கட்சி வெற்றி பெறுவதற்கு வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

