கோலலங்காட்
நாடாளுமன்ற தொகுதியில்
மணிவண்ணன் வெற்றி வாய்ப்பு பிரகாசம்

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் கெஅடிலான் கட்சி வேட்பாளர் ஜி. மணிவண்ணன் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

இத்தொகுதியில் மலாய்க்காரர்கள் 58%, சீனர்கள் 21%, இந்தியர்கள் 17%, பூர்வீகக் குடியினர் 4%. மலாய்க்காரர்கள் பேராதரவை திரட்டப் கெஅடிலான், ஜசெக மற்றும் அமானாவும் களத்தில் இறங்கி இணைந்து செயல் பட்டு வருகின்றன.

இதே போல் சீனர்களின் பேராதரவை திரட்டுவதில் ஜ.செ.க.வைச் சேர்ந்த பந்திங் சட்டமன்ற உறுப்பினர் லௌ இ சாங் தலைமையில் ஒரு மாபெரும் தேர்தல் இயந்திரமே செயல்பட்டு வருகிறது.

நமது வேட்பாளர் மணிவண்ணனும் தொகுதித் தலைவர் ஹரிதாசும் சட்டமன்ற உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இம்முறை கோலலங்காட்டில் பக்கத்தான் ஹரப்பான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles