
வெள்ளம் ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தலாம் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைக் கூறியதை அடுத்து, பல பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் அவரை வன்மையாக விமர்சித்துள்ளனர்.
பக்கத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் இஸ்மாயில் சப்ரியின் அறிக்கை வரவிருக்கும் வெள்ளச் சூழ்நிலையின் யதார்த்தத்தால் தூண்டப்பட்டதா அல்லது தேசிய முன்னணியின் பலவீனமான நிலையால் உருவானதா என்று கேள்வி எழுப்பினார்..

