
பெட்டாலிங் ஜெயா வில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் பயிலும் 14 வயது இந்திய மாணவனின் மர்ம பகுதியை படம் பிடித்த ஆசிரியர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டிருப்பதாக மாணவனின் குடும்பத்தின் சார்பில் ஆஜராகியிருக்கும் வழக்கறிஞர் விமல் அரசன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாணவனை ஆசிரியர் ஸ்டோர் அறையில் அடைத்து மிரட்டி படுக்க வைத்து அவனின் மர்மப் பகுதியை படம் பிடித்துள்ளார்.
ஆசியருக்கு எதிராக செய்யப்பட்ட போலீஸ் புகாரை வாபஸ் பெறும்படி பள்ளி நிர்வாகம் பெற்றோரை வற்புறுத்தி வருகிறது.
இந்த மோசமான செயலை புரிந்த ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த ஆசிரியருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என வழக்கறிஞர் விமல் அரசன் தெரிவித்தார்.

