
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் தற்போது தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளார்.
கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் கெஅடிலான் வெற்றி பெற்றது. இம்முறை பக்கத்தான் ஹரப்பான் சார்பில் உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் போட்டியிடுகிறார்.
இவர் மண்ணின் மைந்தர் என்பதால் போட்டி கடுமையாக இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலு சிலாங்கூர் மாநிலத்தில் நாடாளுமன்ற தொகுதியில் வேலை செய்து வரும் டத்தோ டி. மோகன் தற்போது வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.
ஒரு நல்ல சேவையாளரான டத்தோ மோகனை ஆதரித்து ம இகா தலைவர்கள் மற்றும் தேசிய முன்னணி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடே எதிர்பார்க்கும் ஒரு தேர்தல் களமாக உலு சிலாங்கூர் மாறியிருக்கிறது. இவ்வார இறுதியில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கலாம் என்று கூறப்படுகிறது.


