
டெல்லி: நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி கூடுகிறது.
அதேநாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மறுநாள் ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு மூன்றாவது முறையாகவும், தேஜ கூட்டணி அரசு அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு நேர பட்ஜெட் இதுவாகும். புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பாட்ஜெட் இதுவாகும்

