
கோலாலம்பூர், ஜூலை 7- அந்நிய நாட்டு விபசாரக் கும்பலுக்கு எதிராக கிள்ளான் பள்ளத்தாக்கின் எட்டு இடங்களில் சிறப்பு அதிரடிச் சோதனையை நடத்திய குடிநுழைவுத் துறையினர் 75 பேரைக் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் 1.45 மணியளவில் தொடங்கிய இந்த சோதனையில் புத்ரா ஜெயா குடிநுழைவுத் துறையின் உளவு மற்றும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் உறுப்பினர்களும் பங்கு கொண்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.
பொது மக்கள் கொடுத்த தகவல் மற்றும் இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் அடிப்படையில் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், இச்சோதனையில் 32 இந்தோனேசியர்கள், 11 வங்காளதேசிகள், எட்டு வியட்னாமியர்கள், ஆறு இந்தியர்கள் உள்ளிட்ட 57 பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.

