சுங்கை பாக்காப் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம்! பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர்: ஜூலை 7-
மக்களின் குரலுக்கு ஒற்றுமை அரசு மதிப்பளிக்கிறது என்பதால் பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதி தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் தோல்வி கண்டார்.

ஒற்றுமை அரசு இந்த தோல்வியை ஏற்றுக் கொள்கிறது. குறிப்பாக மக்களின் குரலுக்கு அரசு மதிப்பளிக்கிறது.
சுங்கை பக்காப் மாநில சட்டமன்றத்தின் மக்களின் குரலை பிரதமராக நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

அதே வேளையில் மடானி கொள்கையில் தீவிரமான திட்டங்களை முன்னெடுக்க ஒற்றுமை அரசு இலக்கு கொண்டுள்ளது.

மக்களின் நலனை பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மடானியின் அரசாங்கம் இந்த முடிவை உணர்கிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles