மஇகா மத்திய செயலவை உறுப்பினர் தேர்தலில் அண்ட்ரூ டேவிட் முதல் நிலையில் வெற்றி

கோலாலம்பூர் –
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் தேர்தலில் அண்ட்ரூ டேவிட் முதல் நிலையில் வெற்றி பெற்றார். 21 இடங்களுக்கு கிட்டத்தட்ட 44 பேர் போட்டியிட்டனர்.

இதில் அண்ட்ரூ டேவிட் 8,578 வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த தினாளன் ராஜகோபாலு 8,270 வாக்குகள் பெற்று இரண்டாவது நிலையில் வெற்றி பெற்றார்.

ஜொகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் நவின் கிருஷ்ணசாமி 8,253 வாக்குகள் பெற்று 3 ஆவது நிலையில் வெற்றி பெற்றார்.

கூட்டரசுப் பிரதேசத்தைச் சேர்ந்த டத்தோ ஏ.கே. இராமலிங்கம் 8,251 வாக்குகள் பெற்று நான்காவது நிலையில்ப்வெற்றி பெற்றார்.

இவர்களை தவிர்த்து டத்தோ சுப்பிரமணியம், டத்தோ சிவா, டத்தோ கமலநாதன், டத்தோ தமிழ்வாணன், வின்சென்ட், சிவசுப்பிரமணியம், ஜி. ராமன், ஆர்டி ராஜா, டத்தோ ஆனந்தன், டத்தோ குணாளன், டத்தோ கருப்பண்ணன், டத்தோ முனியாண்டி, டத்தோ ஆர். சுப்பிரமணியம், டாக்டர் நோவலன், டத்தோ எஸ்எம் முத்து, குணாளன் ராஜூ, தர்மகுமாரன் ஆகியோர் வெற்றி பெற்றார்.

அதே வேளையில் டத்தோ சக்திவேல், டத்தோ தமிழ் செல்வம், எம்பி ராஜா, சோமசுந்தரம், டத்தோ விக்னேஸ்வரன், ரமணி கிருஷ்ணன், அம்பாங் சதாசிவம், கிள்ளான் ஓபாமா முருகன் ஆகியோர் தோல்வி கண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles