
பேராக் மாநிலத்தில் உள்ள சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் கெஅடிலான் வேட்பாளர் எஸ். கேசவனை ஆதரித்து நாளை வியாழக்கிழமை நவம்பர் 10 ஆம் தேதி மாபெரும் பிரச்சார கூட்டம் இரவு 7.00 மணிக்கு நடைபெறுகிறது.
ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராயர், பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் மற்றும் தமிழச்சி காமாட்சி உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த பிரச்சார கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும் படி அழைக்கப்படுகிறார்கள்.

