மாமன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு தலைநகரைச் சுற்றியுள்ள 14 சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும்

கோலாலம்பூர், ஜூலை 18: எதிர்வரும் சனிக்கிழமை மாட்சிமை மிக்க மாமன்னர் இப்ராஹிம் அவர்களின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு தலைநகரைச் சுற்றியுள்ள மொத்தம் 14 சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

முக்கியப் பிரமுகர்களை அழைத்துச் செல்வதற்கும், போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை அமல்படுத்துவதற்கு மூத்த மற்றும் இளைய காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட 387 உறுப்பினர்களை அன்றைய தினம் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை பணியில் ஈடு படுத்தும் என்றார்.

“ஜாலான் துன் ரசாக், ஜாலான் கியா பெங், ஜாலான் ராஜா சூலான், ஜாலான் அம்பாங், ஜாலான் சுல்தான் இஸ்மாயில், நெடுஞ்சாலை சுல்தான் இஸ்கண்டார், ஜாலான் துவாங்கு அப்துல் ஹலிம், ஜாலான் செமந்தன், ஜாலான் டாமன்சாரா, ஜாலான் இஸ்தானா, கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலை, ஜாலான் கூச்சிங் (தெற்கு), டத்தோ ஓன் ரவுண்டபோர்ட் மற்றும் ஜாலான் நாடாளுமன்றம் ஆகியவை சம்பந்தப்பட்ட சாலைகள் ஆகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles