
குவாந்தான், ஜூலை 18-
கடந்த ஜூன் 29 , 2024 ,கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி ஒருவர் பகாங் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிலம் கிடைத்து, கட்டுமானம் பணி நடைபெற்று வருகிறது என்று ஒரு செய்தியை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அந்த செய்தி மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
6/7/2024 அன்று பகாங் மாநில உரிமைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் திரு. கணேசன் அது உண்மையா என்று கல்வி அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்
காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்.
இன்றுவரை நில குத்தகை ஒப்புதல் பற்றியோ அல்லது கட்டுமானம் தொடங்கப்பட்டதை பற்றியோ இதுவரை எந்த அதிகாரபூர்வ செய்தியையும் வரவில்லை என்று அவர் கூறினார்.
அண்மையில் அந்த பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை சென்று பார்த்தபோது அங்கே எந்த ஒரு கட்டுமான பணியும் நடக்க வில்லை.
அங்கே வெறும் நிலம் மட்டுமே இருக்கிறது .
அதனால், அந்த அதிகாரி வெளியிட்ட அறிக்கை உண்மையா, பொய்யா என்பது குறித்து கல்வி அமைச்சரிடம் இருந்து உண்மையான விளக்கத்தை பெறும் நோக்கில் காவல்துறையில் புகார் அறிந்திருக்கிறோம்
20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் இந்தப்பள்ளிக்கான தீர்வு கிடைக்காமல் இருக்கிறது. இந்த கடினமான
சூழ்நிலையில் எப்படிப்பட்ட கல்வியை நம் தமிழ்ப் பிள்ளைகள்
பெறுவார்கள் என்று நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
ஆரம்பக் கல்விதான் மனித ஆற்றல் மேம்பாட்டின் அடிக்கல்
அதற்கான அடித்தளம் சரியாகப் போடப்படவெண்டும் என்பதே அனைவருடைய விரும்பம்.இந்த பள்ளியின் நிலைமை இப்படியே தொடர்ந்தால் எதிர் காலத்தில்
மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, அதை காரணம் காட்டி புதிய கட்டுமானம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் ஜெராம் தமிழ்ப்பள்ளி குறித்து உரிமை கட்சி
விரைவில் போராட்டத்தை முன்னெடுக்கும்
என பகாங் மாநில உரிமை கட்சியின்
ஒருங்கிணைப்பாளர்
கணேசன் தெரிவித்தார்.

