
பெட்டாலிங்ஜெயா: ஜூலை 18-
சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வேலை வாய்ப்பு கண்காட்சி மூலம் 10,000 பேருக்கு பயனளிக்கும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு கண்காட்சி மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறவுள்ளது.
பெர்கேசோவின் ஒத்துழைப்புடன் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 23 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இதேபோன்று கோல லங்காட், உலு லங்காட், கோம்பாக், கிள்ளான், கோல சிலாங்கூர், சிப்பாங், சபா பெர்ணம் ஆகிய மாவட்டங்களிலும் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சிகள் நடைபெறும் என்று அவர் சொன்னார்.

