
சென்னை: இந்த ஆண்டு இறுதியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்தப்பட இருப்பதாகவும், திருச்சி அல்லது மதுரையில் மாநாட்டை நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் மாநில மாநாட்டை நடத்தி முடித்த பிறகு, அடுத்தடுத்து மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்கள், நடைபயணங்களை விஜய் திட்டமிட்டிருக்கிறார்
நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகே மாநாடு நடைபெறும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

