இணையப் பகடிவதை தொடர்பில்இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது! நாடாளுமன்றத்தில் சிகாமாட் எம்பி யூனிஸ் வரன் கேள்வி

கோலாலம்பூர் ஜூலை 18-
இன்று நாட்டில் மிகப்பெரிய விவகாரமாக இணையதள பகடிவதை விளங்குகிறது.

சைபர்பூலி எனப்படும் இந்த இணைய பகடிவதை சம்பவத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இணைய பகடிவதை குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை எடுக்கப்பட வேண்டும் என்று இதற்கு முன்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

இந்த இணைய பகடிவதை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் வலியுறுத்தி இருப்பதை வரவேற்கிறேன்.

ஆகவே இது தொடர்பில் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் விளக்க வேண்டும் என அவர் நாடாளுமன்றத்தில் கேள்வியை முன் வைத்தார்.

இந்த இணைய பகடிவதை சம்பவங்கள் இரவு நேரத்தில் நடக்கின்றன.

அண்மையில் தற்கொலை செய்து கொண்ட ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி இணைய பகடிவதை சம்பவமும் இரவு நேரத்தில் நடந்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த அமைச்சு பல அமைச்சர் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாமி பட்சில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles