99 வயதான முன்னாள் பிரதமர் துன் டாக்டர் தேசிய இருதய கழகத்தில் அனுமதி !

கோலாலம்பூர்: ஜுலை 18-
99 வயதான முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இருமல் காரணமாக தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை துன் டாக்டர் மகாதீரின் உதவியாளர் இன்று உறுதிப்படுத்தினார்.

கடந்த திங்கட்கிழமை முதல் அவர் தேசிய இருதய கழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இருமல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக தகவல்களை வழங்க இயலாது என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை தரப்பு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles