
பினாங்கு, பாயான் லெப்பாஸ் (Bayan Lepas)சிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 11ஆவது மாடியில் இருந்து 13 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தார்.
அச்சிறுமியின் உடல் கார் நிறுத்துமிடப் பகுதியின் கூரை மீதிருந்து மீட்கப்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குனர் முகமட் அஃபீஸ் ஹஃபிஸால் திமாராடின் (Mohd Hafiz Hafizal Timaradin) தெரிவித்தார்.
காலை ஆறரை மணியளவில் தகவல் கிடைக்கப் பெற்று சம்பவத் தளம் விரைந்த பாயான் பாரு தீயணைப்பு நிலைய வீரர்கள், சிறுமியின் உடலை மீட்டதாக முகமட் அஃபீஸ் கூறினார். சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதை உடன் வந்திருந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சிறுமியின் சடலம் அடுத்த கட்ட நடவடிக்கைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

