மலேசிய செப்பாக் தாக்ராவ் அணிக்கு வெகுமதிகள் வழங்கி பாராட்டினார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்!

புத்ரா ஜெயா, ஜூலை 23-
கடந்த மே மாதம் Kejohanan Piala Dunia Sepak Takraw Tahun 2024 போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் இரட்டை சாம்பியன் பட்டத்தை வென்ற தேசிய sepak takraw அணியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று சந்தித்து உரையாடினார்.

இந்த சந்திப்பின் போது sepak takraw ஸ்டேடியம் அமைக்க வேண்டியதன் அவசியம், sepak takraw விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளின் தொழில் மற்றும் நலன் போன்றவற்றை மேற்கொண்டு கல்வி கற்கும் வாய்ப்பு, sepak takraw விளையாட்டின் அந்தஸ்து ஆகியவை விவாதிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், தேசிய sepak takraw அணியின் ஒவ்வொரு வீரர்களா மற்றும் பயிற்சியாளருக்கும் வெற்றிப் பரிசாக RM10,000 வழங்குவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

உலக அரங்கில் தேசிய sepak takraw விளையாட்டின் பெருமையையும் தரத்தையும் உயர்த்தி நாட்டின் பெயரை செழுமைப்படுத்திய தேசிய sepak takraw அணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles