
[12:34 PM, 11/10/2022] Manan: நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நவம்பர் 18 ஆம் தேதி பொது விடுமுறையை சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மாநில பக்கத்தான் அரசாங்கங்கள் அறிவித்துள்ளன.
நவம்பர் 19 ஆம் தேதி நடக்கும் வாக்களிப்பு தினத்தில் வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றும் வகையில் நவம்பர் 18 ஆம் தேதி பொது விடுமுறை நாளாகும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் நேற்று அறிவித்தனர்.
இந்நிலையில் பினாங்கு மாநில முதல்வர் சோவ் கூன் இயோ இன்று வெளியிட்ட அறிவிப்பில் பினாங்கு மாநிலத்திலும் நவம்பர் 18 ஆம் தேதி பொது விடுமுறை அனுசரிக்கப்படுகிறது என்றார்.
பினாங்கு மாநிலத்தில் உள்ள மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நவம்பர் 18 ஆம் தேதி விடுமுறை வழங்கப்படுகிறது என்றார்.

