
கோலாலம்பூர், ஜூலை 24-
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் பண பட்டுவாட இயந்திரத்தில் தமிழ்மொழி தேர்வை வைக்க வேண்டும் என வங்கிகளின் சங்கத்திடம் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது.
கடந்த ஜூலை 21 ஆம் திகதி ஈப்போவில் நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பண பட்டுவாட இயந்திரத்தில் தமிழ்மொழி இடம்பெற வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று PERSATUAN MUHIBBAH PRIHATIN TAIPING ஆலோசகர், மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையாவின் வழிகாட்டலுடன் மலேசிய வங்களின் சங்கத்துடன் இரண்டாவது சந்திப்பு கூட்டம் நிகழ்ந்தது.
பண பட்டுவாட இயந்திரத்தில் தமிழ் மொழி தேர்வு இருக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் MEPS நிருவனம் தனது பண பட்டுவாட இயந்திரத்தில் தமிழ் மொழி தேர்வை வைத்துள்ளது.
இருப்பினும் நாட்டில் உள்ள மற்ற வங்கிகளில் இன்னும் தமிழ் மொழி இடம்பெறாமல் உள்ளது வருத்தமாக உள்ளது என டத்தோ முருகையா தெரிவித்தார்.
இந்த நாடு சுகந்திரம் பெறுவதற்கு மூவினத்தின் போராட்டம்தான் காரணம். அவ்வகையில் மலாய் மற்றும் சீன மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது நியாயம் இல்லை. தமிழ் மொழிக்கும் உறிய அங்கிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
இதனிடையே ஆகஸ்ட் மாதம் இறுதிக்குல் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் உரிமையாளர்களையும் வங்கிகளின் சங்கம் சந்தித்து இதன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

