சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து பள்ளிகளுக்கு நன்கொடை கூடாது! ம இகா மகளிர் அணி வரவேற்பு

கோலாலம்பூர் ஜூலை 25-
சூதாட்ட நிறுவனங்களிடம் இருந்து பள்ளிகளுக்கு நன்கொடை கூடாது என்ற முடிவை ம இகா தேசிய மகளிர் அணி வரவேற்பதாக அதன் தலைவர் மாண்புமிகு சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார்.

மது சிகரெட் மற்றும் சூதாட்ட நிறுவனங்களிடம் இருந்து பள்ளிகளுக்கு நன்கொடை கூடாது என்ற நிலைப்பாட்டை பாதுகாக்கும் அம்னோ இளைஞர் பிரிவின் முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம்.

சீனப் பள்ளிகள் உட்பட கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதற்கு முன்வைக்கப்பட்ட வழிமுறைகளை ஒருபோதும் தளத்தப்படாது என்று கல்வி அமைச்சர் பாட்லினா சீடேக் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த விவகாரத்தில் எந்தக் கட்சி அழுத்தம் கொடுத்தாலும் இந்த கொள்கையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டுமென சரஸ்வதி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles