25 தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டும் தரப்பினர்!

ஈப்போ, ஜுலை. 26 : இங்குள்ள தபால்துறை நிறுவனம் தங்களின் 25 தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்குவதில்லை. அதோடு, இ பி எப் மற்றும் சொக்சோ சந்தாவையும் முறையாக செலுத்தவில்லை என்று இங்குள்ள தபால்துறை நிறுவன தொழிலாளர்கள் பேராக் மாநில மனித பல தொழிலாளர் இலாகவிடம் புகார் செய்துள்ளனர்.

இங்கு வேலை செய்யும் இந்திய மற்றும் மலாய்கார தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று முதலாளி தரப்பினர் மிரட்டும் பாணியில் செயல்படுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இவ்விவகாரம் தொடர்பாக இத்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போலீஸ் புகார் ஒன்றை செய்துள்ளனர். அதோடு இப்பிரச்சினை குறித்து பேராக் மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் பார்வைக்கும் கொண்டு் சென்று விட்டனர்.

தற்போதைய சூழ்நிலையில் வேலை கிடைப்பது கடினம் என்பதாலும், குடும்ப சுமை இருப்பதால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு வேலை செய்து வருவதாக தொழிலாளர்கள் மிகவும் மன வேதனையுடன் கூறுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles