
ஜோகூர் பாரு, ஜூலை 26-: ஜோகூர் பண்டார் டத்தோ ஓனில் உள்ள ஓர் இல்லத்தில் குழந்தையை கொடுமை செய்ததாக பராமரிப்பாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பராமரிப்பாளர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பின்னர் இரண்டு மாதப் பெண் குழந்தையின் இடது தொடை எலும்பு முறிவு ஏற்பட்டது குறித்து தனது துறைக்கு ஒரு புகார் கிடைத்தது என ஜொகூர் பாரு செலாத்தான் (JBS) மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ராவூப் செலாமட் கூறினார்.
தகவலின் பேரில், ஜேபிஎஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவல்துறை குழு 36 வயதுடைய அப்பெண்ணைக் கைது செய்தது.
“மறு ஆய்வின் முடிவில் சந்தேக நபரிடம் முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது மற்றும் சிறுநீர் பரிசோதனையின் முடிவும் அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்று காட்டியது,” என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

