
கோல குபு பாரு: ஜுலை 26-
முன்னாள் UPSI பல்கலைக்கழக மாணவியான நூர் ஃபரா கார்த்தினியை கொலை செய்ததாக காவல்துறை அதிகாரி லான்ஸ் கோப்பரல் முகமட் அலிப் மொஞ்ஜானிக்கு எதிராக குற்றவியல் சட்டம் செக்ஷன் 302 இன் கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் 10 மற்றும் 15 ஆம் தேதிக்கு இடையே உலு பெர்ணம், கம்போங் ஸ்ரீ கிளேடாங்கிலுள்ள செம்பனை தோட்டம் ஒன்றில் சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான நுர் ஃபாரா கார்தினியை கொலை செய்ததாக இவருக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது 12 க்கும் குறையாத பிரம்படிகள் வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இந்த வழக்கு இன்று கோல குபு பாரு நீதிமன்றத்தில் நீதிபதி நுருள் மர்டிஹா முகமது ரெட்சா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

