
கோலாலம்பூர்: ஜூலை 27-
நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா நிச்சயம் களமிறங்கும். அதன் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை உறுதிப்படுத்தினார்.
நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி நடைபெறும்.
இந்த தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் போட்டியிடும் பட்சத்தில் அவரின் வெற்றியை உறுதி செய்ய பிரச்சார கேந்திரத்தை களமிறக்க மஇகா தயாராக உள்ளது.
மஇகா நிச்சயமாக இந்த தேர்தலில் பிரச்சாத்தை முழு வீச்சில் மேற்கொள்ளும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்
இந்த தேர்தலில் வேட்பாளர் தேசிய முன்னணியை சேர்ந்தவர் என்றால் அவரின் வெற்றிக்காக மசீசவும் நிச்சயம் பிரச்சாரம் செய்யும் என்று
மசீச பொதுச் செயலாளர் சோங் சின் வூன் உறுதிப்படுத்தினார்.

