
காப்பார், ஜூலை 27-
நாளை 28/07/2024 ஞாயிற்றுக் கிழமை,மலேசிய இந்து சங்க காப்பார் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில், காப்பார் நாடாளு மன்றத்தில் இருக்கின்ற அனைத்து ஆலயங்களின் நிர்வாகத்தின் பெரும் ஆதரவில், அரசு சாரா இயக்கங்களின் முழு ஒத்துழைப்புடன், அனைத்து பாரி கொடை நெஞ்சங்களின் முன்னனியில் தேசிய வகை வலம்புரோச தமிழ்ப் பள்ளியில் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் 46-ஆவது திருமுறை ஓதும் விழா எம்பெருமானின் ஆசியுடன் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
காலை மணி 8.00க்கு திருமுறை போட்டியும் மதியம் 1 மணிக்கு மேல் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த திருமுறை விழாவில் தேசிய வகை பிராப்டன் தோட்ட தமிழ் பள்ளி,தேசிய வகை வலம்புரோச தோட்ட தமிழ்ப் பள்ளி , தேசிய வகை ஜாலான் அக்கோப் தமிழ்ப் பள்ளி,தேசிய வகை மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி, காப்பார் தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம், கோயில் ஸ்ரீ மஹா மாரியம்மன் பெக்கன் மேரு ஆலயம், ஜாலான் அக்கோப் முனீஸ்வரன் ஆலயம்,பத்து பெல்லா முனீஸ்வரர் ஆலயம், சேரா செரியா பாலர் பள்ளி,7 ஆவது மைல்,இந்து தர்ம மாமன்றம் கிள்ளான் உத்தாமா மற்றும் காப்பார் கூட்டு பிராத்தனை, லஷ்மி தியான மன்றம் பிரதிநிதித்து சுமார் 300க்கும் மேற்பட்ட நம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறப்பு விருந்தினராக மாண்புமிகு கணபதி ராவ் வீரமன்
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர், மாண்புமிகு பாப்பாராய்டு வீரமன்
சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிகுழு உறுப்பினர், மாண்புமிகு புவான் ஹாஜா உஸ்தாசா மரியம் பிந்தி அப்துல் ரஷித்
சிலாங்கூர் மேரு சட்டமன்ற உறுப்பினர், மதிப்புமிகு டத்தோ ஸ்ரீ அஜிசி பின் அயோப்
காப்பார் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர், மதிப்புமிகு டத்தோ ஹாஜி ரோஸ்லி
செமாந்தா சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் கலந்து கொன்டு சிறப்பிக்க உள்ளனர்.
ஆகவே சுற்று வட்டார மக்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

