நம்நாட்டு தலைவர்களையும் சான்றோர்களையும் நினைவு கூர்வோம்

ஈப்போ, ஜுலை.27-
நம் நாட்டு தலைவர்கள் மற்றும் சான்றோர்களுக்கு விழா எடுக்கும் முன்னுரிமை வழங்குவோம். நன்றி கெட்ட பண்புகளுடன் மண்ணின் மைந்தர்களை ஓரங்கட்டி விட்டு இந்திய நாட்டு தலைவர்களையும், சான்றோர்களுக்கு விழா எடுக்கும் பண்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று துன் வீ தி சம்பந்தனின் 105 வது பிறந்தநாள் விழாவின் ஏற்பாட்டுக்குழு தலைவரான கி.மணிமாறன் தம் கருத்தை பதிவு செய்தார்.

கம்பன், கண்ணதாசன், வைரமுத்து போன்றோருக்கு விழா எடுப்பதை விட
நம் மலேசிய நாட்டில் நம் இன மக்களுக்கு சேவையாற்றி மறைந்த முன்னாள் தலைவர்களுக்கு விழா எடுக்க நம்மில் பலருக்கு மனமில்லை.

நம்முடைய சிறந்த இந்திய தலைவர்களை நாளுக்கு நாள் மறந்துக்கொண்டே போகிறோம்.
டான்ஸ்ரீமாணிக்கவாசகர் உட்பட பலர் மறந்து விட்டனர்.

நான் சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்திருந்தால் டான் ஶ்ரீ
மாணிக்கவாசகம், டத்தோ ஆதி. நாகப்பன், டத்தோ பத்மநாபன், டான்ஸ்ரீ சுப்ரா, பட்டு, டேவிட் போன்ற தலைவர்களுக்கு விழா எடுத்திருப்பதில் முனைப்பு காட்டுவேன் என்று அவர் வலியுறுத்தினார்.

இது போன்ற பல சிறந்த தலைவர்கள் நாம் மறந்து விட்டோம். இப்படி மறந்துக்கொண்டே போனால் காலப்போக்கில் நமது சந்த தியினருக்கு நமது வரலாறும் இந்திய சமூக தலைவர்களும் தெரியாமல் போய்விடுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் அடிப்படையில்தான் இந்நாட்டின் இந்திய சமூக சுதந்திர தந்தையான துன் வீ தி சம்பந்தனின் பிறந்தநாளை பள்ளி மாணவர்களின் முன்னிலையில் செய்து வருகிறோம். இவ்வாறு செய்வதனால் துன் பற்றிய வரலாறு மற்றும் இந்நாட்டு இந்திய சமூகத்திற்கு அவர் செய்த மகத்தான சேவைகளை அம்மாணவர்கள் அறிவதோடு, அவர்களின் மனதில் ஆழமாக பதியும் என்ற உன்னத நோக்கதிற் காக செய்யப்படுவதாக அவர் எடுத்துரைத்தார்.

ஆகவே, இந்நாட்டு தலைவர்கள் மற்றும் சான்றோர்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் இயக்கங்கள் நன்றி உணர்வோடு அவர்களது தலைவர்களை நினைவுகூர்வது மிகவும் அவசியமாகும் என்று அவர் கருத்துரைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles