
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது என்பது குறித்த தகவலை போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது
.இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விஞ்ஞானியான புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து தங்களது பணியை முடித்துவிட்டு ஜூன் 13ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என அமெரிக்க விண்வெளி மையமான நாசா தெரிவித்தது.
ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் போயிய் ஸ்டார்லைனர் விண்கலத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்ப தேதி குறிக்கப்பட்டது.
55 நாட்களுக்கு மேலாக சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் இப்போது நோய் வாய்ப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த நாசா, போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கோளாறு சரி செய்யப்பட்டு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு விரைவில் திரும்புவார்.
ஆனால் தேதியை கூற முடியாது எனவும் தெரிவித்தது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்ற கவலை எழுந்தது.

