

கோலாலம்பூர் ஜூலை 28-
அடுத்த மாதம் சரவாக் கூச்சிங் நடைபெறும் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெற்றுள்ளது.
இது சிலம்ப கலைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் என்று மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் எம் சுரேஸ் தெரிவித்தார்.
14 மாநிலங்களைச் சேர்ந்த சிலம்ப விளையாட்டாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
மொத்தம் 14 தங்கம் 14 வெள்ளி 28 வெண்கலப் பதக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
2013 ஆம் ஆண்டு சுக்மா போட்டிக்கு பிறகு சும்மாவில் மீண்டும் சிலம்பம் இடம் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.
வரும் 2027 ஆம் ஆண்டில் மலேசியாவில் சீ விளையாட்டு போட்டி நடைபெறுகிறது.
இந்த சீ போட்டியில் சிலம்பமும் இடம் பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
மேலும் மலேசிய விளையாட்டு மன்றம் கட்டும் புதிய கட்டடத்தில் மலேசிய சிலம்ப கழகத்திற்கு அலுவலகம் வழங்கப்படவிருப்பதாக அவர் சொன்னார் .
மலேசிய சிலம்ப கழகத்தின் 44 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று புக்கிட் ஹாலில் காமன்வெல்த் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டாக்டர் நெல்சன் இந்த ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
ம இகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம், தலைமை மகாகுரு பெரியசாமி கருப்பன், துணை தலைவர் மாரிமுத்து, உதவித் தலைவர்கள் சரவணன், கமலநாதன், சிவன், சுந்தரராஜூ, செயலாளர் குமரா, பொருளாளர் கேப்டன் தேவேந்திரன் ( ஆகாயப்படை) மற்றும் டாக்டர் பி.எஸ். பிள்ளை உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

