பத்துமலை திருத்தலத்தில் ஆகஸ்ட் 4 இல் ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரை !

கோலாலம்பூர் ஜூலை 28-
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரை வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலையில் நடைபெறவுள்ளது என்று அந்நிலையத்தின் தோற்றுநரும் இயக்குநருமான டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா கூறினார்.

இந்த கல்வி யாத்திரையில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

இந்திய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்குவதே ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் இலக்காகும்.

1982ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஶ்ரீ முருகன் நிலையம் இது வரையிலும் 28,000க்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரிகளை உருவாக்கி உள்ளது.

இந்த நாட்டில் இந்தியர்கள் கல்வி மூலமாகவே முன்னேறி வெற்றியடைய முடியும்.

இதற்கான உந்துசக்தியும் தன்முனைப்பும் நமது சமயம், இந்திய பாரம்பரியத்தில் உள்ளது.

நமது இந்து சமயமும், பாரம்பரியமும் மனிதனை நிலையான வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடியது.

அந்த வெற்றியை அடைவதற்க்கான ஞான ஒளியை கொண்டுள்ள நமது இந்து சமய, கலாச்சார, பாரம்பரிய இரகசியத்தை கடந்த 42 ஆண்டுகளாக ஶ்ரீ முருகன் நிலையம் உயர்பித்து அதனை வெற்றிக்கான தன்முனைப்பாக நிலைநிறுத்தி வருகிறது என்று டான்ஸ்ரீ தம்பிராஜா கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles