
சுங்கை பட்டாணி, ஜூலை 29-
கெடா மாநிலத்தில் காந்தி மண்டபத்தில் நடைப்பெற்ற மக்கள் சக்தி கட்சியின் கெடா மாநில ஆண்டு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மக்கள் கட்சி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர் எஸ் தனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உதவித் தலைவர் குகனேஸ்வரன், மணிவண்ணன், மகளிர் அணி தலைவி ஜெயலெட்சுமி, டத்தின் வாணிஸ்ரீ உட்பட ம இகா, கிம்மா ஐபிஎப், கெடா மாநில தமிழ்ப் பள்ளி பொறுப்பாளர்கள் மற்றும் கோவில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மக்கள் சத்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன்,
இதுவரை மக்கள் சக்தி கட்சி முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் வழக்கில் அவருக்கு உறுதுணையாக துணை நின்றது.
அவருக்கு நியாயம் கிடைக்க தொடந்து மக்கள் சக்தி அவர் பக்கம் நின்று குரல் கொடுக்கும் என்றார்.
கெடா மாநில மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ சண்முகம், மாநில செயலாளர் நாகேந்திரன் ஆகியோரும் கூட்டத்தில் இதனை வலியுறுத்தினர்

இதனிடையே அந்த ஆண்டு கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ தனேந்திரன் மற்றும் குகனேஸ்வரன் ஆகியோர் சுங்கை பட்டாணி வட்டாரத்தில் அமைந்துள்ள சில ஆலயங்களுக்கு மானியமும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

