
பிறை ஜூலை 29-
2024 – 2027 ஆண்டிற்கான பினாங்கு மாநில மஇகா மகளிர் அணிக்கு திருமதி.ஷோபா மகாலிங்கம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இவர் முன்னால் பினாங்கு மாநில புத்ரி தலைவியும் ஆவார்.
மேலும் ம.இ.கா தேசிய புத்ரியில் பொருளாளர் பதவியை வகுத்திருந்தார். ம.இ.கா மாநில மகளிர் தலைவிகளுக்கிடையே மிக இளம் வயது தலைவியாக திருமதி.ஷோபா நியமிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது.
இவ்வேளையில் ம.இ.கா தேசியத் தலைவர் Tan Sri SA.VIGNESWARAN அவர்களுக்கும் ம.இ.கா தேசிய மகளிர் தலைவி YB. N. SARASWATHY அவர்களுக்கும் பாராட்டும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேசிய தலைவரின் கொள்கையை மகளிர் தலைவிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவார்கள் என வாழ்த்துகிறோம் என்று விலாயா செபூத்தோ தொகுதி ம இகா மூத்த அரசியல்வாதி இராமமூர்த்தி தெரிவித்தார்.

